Additional Resource

COVID-19 புதுப்பிப்பு (Tamil)

இன்றைய தேதி நிலவரம்: சபை அங்கத்தினர்களின் கூட்டங்கள் உலகளவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன

குறைந்தது மாதத்திற்கு ஒருமுறையாவது  அங்கத்தினர்களுக்கு திருவிருந்து எவ்வாறு கிடைக்கச் செய்வதென தீர்மானிக்க உள்ளூர் தலைவர்கள் ஆலோசிப்பார்கள்.

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் பிரதான தலைமையும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமமும் பின்வரும் கடிதத்தை மார்ச் 12, 2020ல் உலகமுழுவதிலுமுள்ள சபை அங்கத்தினர்களுக்கு அனுப்பினார்கள்.

அன்பான சகோதர சகோதரிகளே,

மார்ச் 12, 2020ல் எங்கள் கடிதத்தில் வாக்களித்தபடி, உலகமுழுதிலும் கோவிட்-19க்கு சம்பந்தப்பட்ட மாறிக்கொண்டிருக்கும் தன்மைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கிறோம். உள்ளூர் சபைத் தலைவர்கள், அரசாங்க அலுவலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை நாங்கள் கருத்தில்கொண்டு, இக்காரியங்களில் கர்த்தருடைய வழிநடத்துதலை நாடியிருக்கிறோம். இப்போது பின்வரும் இன்றைய தேதி நிலவர வழிகாட்டுதல்களை நாங்கள் வழங்குகிறோம்.

உடனடியாக ஆரம்பித்து, சபை அங்கத்தினர்களின் அனைத்து பொதுக் கூட்டங்களும் அடுத்த அறிவிப்பு வரும் வரை உலகளவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதில் அடங்குவன:

  • பிணைய மாநாடுகள், தலைமை மாநாடுகள் மற்றும் பிற பெரிய கூட்டங்கள்
  • திருவிருந்து கூட்டங்கள் உள்ளிட்ட, அனைத்து பொது வழிபாட்டு சேவைகள்
  • கிளை, தொகுதி மற்றும் பிணைய நிகழ்ச்சிகள்

சாத்தியமான இடங்களில், தொழில்நுட்பத்தின் மூலம் தயவுசெய்து எந்தவொரு அத்தியாவசிய தலைமைக் கூட்டங்களையும்  நடத்துங்கள். குறிப்பிட்ட கேள்விகள் உள்ளூர் ஆசாரியத் தலைவர்களுக்கு அனுப்பப்படலாம். பிற காரியங்கள் சம்பந்தப்பட்ட கூடுதல் வழிகாட்டுதல் வழங்கப்படும்.

குறைந்தது மாதத்திற்கு ஒருமுறை  அங்கத்தினர்களுக்கு திருவிருந்தை எவ்வாறு கிடைக்கச் செய்வதென்பதை தீர்மானிக்க, தங்களுடைய பிணைய தலைவருடன் ஆயர்கள் ஆலோசிக்க வேண்டும்.

தங்களுடைய ஊழிய முயற்சிகளில், ஒருவருக்கொருவரை கவனித்துக் கொள்ளுமாறு அங்கத்தினர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.  மற்றவர்களை ஆசீர்வதிக்கவும் உயர்த்தவும் இரட்சகரின் எடுத்துக்காட்டை நாம் பின்பற்றவேண்டும்.

இந்த நிச்சயமின்மையின் நேரத்தில் கர்த்தருடைய அன்பின் சாட்சியை நாங்கள் பகருகிறோம். ஒவ்வொரு சூழ்நிலையிலும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ உங்களால் முடிந்த சிறப்பானதை நீங்கள் செய்யும்போது மகிழ்ச்சியைக் காண அவர் உங்களை ஆசீர்வதிப்பார்.

உண்மையுள்ள,

பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமம்

Style Guide Note:When reporting about The Church of Jesus Christ of Latter-day Saints, please use the complete name of the Church in the first reference. For more information on the use of the name of the Church, go to our online Style Guide.